அகிலேஷ் யாதவ் ஆதரவு அமைச்சர் பவன் பாண்டே சமாஜ்வாடியில் இருந்து டிஸ்மிஸ்

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவு அமைச்சரான பவன் பாண்டே சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச அரசியலில் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவ் இடையேயான மோதலில் சமாஜ்வாடி கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

Akhilesh Minister Pawan expelled from SP

இருதரப்பையும் சமாதானப்படுத்த தொடர்ந்து முலாயம்சிங் யாதவ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சிவ்பால் யாதவ் ஆதரவு எம்.எல்.சியான ஆஷூ மாலிக்கை பவன் பாண்டே கன்னத்தில் அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவரான சிவ்பால் யாதவ், பவான் பாண்டேவை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் பவான் பாண்டேவை சமாஜ்வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதனால் உத்தரப்பிரதேச அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/pnWnddi-XOQ/akhilesh-minister-pawan-expelled-from-sp-265761.html

Related Posts:

«