அஜித்துடன் நடிக்க பயம்: டாப்சி

விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார்.
இதற்கிடையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள ‘தருவு’ படம், தமிழில் ‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது.

இதுகுறித்து டாப்ஸி கூறுகையில், ஒருவழியாக விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான காஸ்டியூம் ஒத்திகை, வசன ஒத்திகை முடிந்தது.

விரைவில் அதில் பங்கேற்கிறேன். இதில் நடிப்பதற்கு நடுக்கமாகவே இருக்கிறது. காரணம் இதில் அஜித் நடிக்கிறார். முதல்முறையாக அவருடன் நடிக்கிறேன்.

நயன்தாரா, ஆர்யாவும் இதில் நடிக்கின்றனர் என்றும் பயமும், நடுக்கமும் இருந்தாலும் படப்பிடிப்பில் பங்கேற்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்

Related Posts:

  • No Related Posts

«