அஜீத்தின் ஜோடி சின்னத்திரைக்கு வந்தாச்சு 

அவர் குடு குடு கிழவியாகவே இருந்தாலும், ஏதோ இந்த சந்தர்ப்பத்திற்காகதான் நாடே காத்திருந்தது போல இவர்கள் கொடுக்கும் பில்டப், எதற்கு உதவுகிறதோ இல்லையோ? சம்பந்தப்பட்ட நடிகைகள் சம்பளத்தை ஏற்ற உதவும். அந்த லிஸ்ட்டில் சின்னத் திரைக்கு வரவிருக்கிறார் சினேகா. குஷ்பு தயாரிக்கும் சீரியலில் சினேகாதான் ஹீரோயின். இது போக இன்னொரு நடிகையும் சின்னத்திரைக்கு வந்துவிட்டார். கூவ வேண்டிய நேரத்தில் கூவினால், இங்குள்ளவர்களுக்கும் ஒரு சான்ஸ் கிடைக்குமே என்றுதான் இந்தக் கூவல். அஜீத்தோடு ஒரு படத்தில் ஜோடி போட்ட பார்வதி ஓமணக்குட்டன், இந்தி சீரியல்களுக்குள் என்ட்ரி ஆகிவிட்டார். அஜீத்தின் ஜோடி என்ற அறிமுகத்தோடு இங்கு மேளம் வாசிக்க நினைப்பவர்கள், கால் டூ ஓமணா குட்டி! 

Related Posts:

  • No Related Posts

«