அடடா இப்படி ஏமாந்துட்டாரே?

தன் படங்களிலெல்லாம் வெளியூரிலிருந்து வந்து இறங்கும் ஹீரோ அவர்.


வந்த இடத்தில் வம்பு சண்டை என்று கதை நகரும். அந்த ஹீரோவுக்குதான் இப்போது அடாத விடாத மன உளைச்சல். என்னவாம்? அவரது லேட்டஸ்ட் படத்தை அவரே தயாரித்தார். ஆனால் முதல் பிரதி அடிப்படையில் இயக்குனருக்கே பத்து கோடி கொடுத்து எடுக்க வைத்தாராம். முடிவில் கணக்கு போட்டு பார்த்தால், செலவு ஐந்து கோடியை கூட தாண்டவில்லை என்று புரிந்ததாம். இத்தனைக்கும் மியூசிக் டைரக்டர் சம்பளத்தையும், கதாநாயகி சம்பளத்தை தானே கொடுப்பதாக கூட அக்ரிமென்ட். இப்படி வலுவா ஏமாந்துட்டமே என்று இவர் வருந்த, அந்த வருத்தத்தில் லேசாக மருந்து போட்ட மாதிரி அமைந்து வருகிறதாம் கலெக்ஷன். சினிமாவுல பழம் தின்னு கொட்டை போட்டாலும், பல்லு தில்லா இருக்கான்னு செக் பண்றதுக்கு இது மாதிரி சோதனையாளர்கள் வந்து சொத்தை பிடுங்குவாங்க போலிருக்கு!

Related Posts:

«