அதிகாரத்தை பகிர்வதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: மனோ கணேசன்

நாட்டின் நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


அத்தோடு, தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைப்பவர்களுக்கு, நாடு பிளவுபட்டால் ஏற்படக்கூடிய அபாயத்தை உணரவைக்கும்படி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பிளவுபட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிந்துகொண்டால், நாட்டில் பிரிவினைவாதம் தடுக்கப்படுவதோடு, அனைவரும் சமமமாக வாழும் வழியேற்படும். நாட்டின் இன்றைய அரசாங்கம் மக்களின் தேவையுணர்ந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts:

«