அந்த பெரிய்ய படத்துக்கு அவங்கதான் பைனான்ஸ்?

காதை கிட்டக் கொடுங்க…. தி.நகரிலிருக்கும் பிரமாண்ட நிறுவனம் ஒன்று நைசாக சினிமாவுக்குள் நுழைகிறது.


அதற்காக, “ஹைய்யா… ஒரு டிக்கெட் வாங்குனா ரெண்டு டிக்கெட் இலவசம். ஆடியில் படம் ரிலீசானா, அம்புட்டு டிக்கெட்டும் தள்ளுபடி கடைக்கும்” என்று ஆவென்று வாயை பிளந்துவிட வேண்டாம். இன்னொரு தயாரிப்பாளருக்கு குறைந்த விலையில் துட்டுக் கொடுத்து ஹெல்ப் பண்ணுகிறதாம். இதில் வரும் லாப நட்டங்கள், வரவு செலவுகள் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் நேரடியாக இறங்கக் கூடும் என்பதுதான் இப்போதைய தகவல். ஆனால் இவர்கள் போட்ட முதன் ‘முதல்’ பெரிய்ய்ய்ய்ய்…ய நடிகரின் படத்திற்கு என்பதால், வட்டியும் சுளையுமாக வந்து சேர்ந்துவிடும். அதனால் அவர்களுக்கும் சினிமாவுக்கு நேரடியாக வந்துவிடுவார்கள். அதற்கப்புறம்தான் இருக்குது தள்ளுபடி… அள்ளுபடியெல்லாம்.

Related Posts:

«