அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக்கொள்வது குறித்து திருமாவளவன் இரவோடு இரவாக ஆலோசனை!

முதலில் திமுக கூட்ட இருக்கும் அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்துக்கொள்ளாது என்று அறிவித்தார், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.ஆனால், இது அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளின் பிரச்சனை  என்பதால்,தோழமை கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது பற்றி முடிவு எடுக்கபடும்  என்று கூறியுள்ளார். அவர்  மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் இரவோடு இரவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

 அதோடு,அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த திமுக-விற்கு நன்றி என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Related Posts:

«