அமலாக்கப்பிரிவு புதிய இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமனம்

டெல்லி: அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதிவரை இப்பதவியில் இருப்பார்.

அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு, இதற்கான ஒப்புதலை அளித்து இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கர்னல் சிங், 1984 -ம் ஆண்டு யூனியன் பிரதேச பிரிவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானவர். மத்திய அமலாக்கத்துறை இயக்குநராக இருந்து வந்த ராஜன் எஸ்.கட்டோச் நீக்கப்பட்ட பின்னர் அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குனராக கர்னல் சிங் நியமிக்கப்பட்டார்.

 Karnal Singh appointed Enforcement Directorate chief

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து அமலாக்கப்பிரிவு இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக கர்னல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெறும் நாளான அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதிவரை இப்பதவியில் இருப்பார்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/3MqZxONtszs/karnal-singh-appointed-enforcement-directorate-chief-265795.html

Related Posts:

«