அமெரிக்காவில் இடம்பெற்ற விசித்திர திருமணம்!


திருமணம் என்பது மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறையாகும்.

அத்துடன், திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் மதம், பண்பாடு போன்ற விடயங்களில் வெவ்வேறு விதமான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

எனினும், நடைமுறையிலுள்ள நெறிமுறைகளுக்கு அப்பால் சென்ற அமெரிக்க பிரஜை ஒருவர் விசித்திரமான திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

ஆம் இன்றைய நவீன காலத்தில் மனிதனின் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள ஸ்மார்ட் போனை ஒருவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் லோஸ் வேகஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. ஏரோன் சேர்வேனக் என்ற மேற்படி இளைஞரே ஸ்மார்ட்போனை முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

குறித்த திருமணமானது கிறிஸ்தவ முறைப்படி இடம்பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏரோன் சேர்வேனக்,

இன்றைய காலத்தில் மக்கள் அவர்களின் ஸ்மார்ட் போன்களை அதகமாக நேசிக்கின்றனர். காலை முதல் இரவு தூங்கும் வரையிலும் மக்கள் ஸ்மார்ட் போனுடனேயே இருக்கின்றனர்.

நமது ஸ்மார்ட் போனுடன் உணர்ச்சிகரமான உறவை நாம் கொண்டுள்ளோம். அது போலவே, என் ஸ்மார்ட்போனுடன் எனக்கு நீண்ட நாள் உறவு உள்ளது.

நமக்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உள்ளது. இது கிட்டதட்ட ஒரு மனித உறவு போன்றதுதான்” என அவர் கூறியுள்ளார்.

Related Posts:

«