அரசு அமைச்சக ஆவணங்கள் திருடுபோன வழக்கில் மேலும் இரு அரசு அதிகாரிகள் கைது

பெட்ரோலியத் துறை அமைச்சகத்தில் பட்ஜெட் குறித்துத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் திருட்டு போன வழக்கில் மேலும் இரு அரசு அதிகாரிகள் கைது செய்யபட்டு உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடர் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிசக்தித் துறைக்கான பட்ஜெட் ஆவணங்கள் திருட்டு போயுள்ளன.இதைக் கண்டறிந்து ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இடைத் தரகர், பத்திரிகையாளர், மேலும் ஒரு அதிகாரி என்று பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த ஆவணங்களைத் திருடி ரிலையன்ஸ் உள்ளிட்ட முக்கிய 6 எரிசக்தி நிறுவனங்களுக்கு விற்றதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ராணுவ அமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு அரசு அதிகாரியும் இப்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

 

Related Posts:

«