அரசு விளம்பரங்களில் பிரதமர்,குடியரசுத் தலைவர் தவிர மற்றவர்கள் படம் கூடாது:உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு தரப்பு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் தவிர மற்றவர்கள் படம் இடம்பெறக் கூடாது என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.


 

தற்போது மத்திய அரசு தரப்பு தொடர்பான விளம்பரங்களில் அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் தனி நபர் படங்களும் இடம்பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு தொடுக்கப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் தவிர மற்ற தனி நபர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

அப்படித் தவிர்க்க முடியாமல் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தனி நபர்கள் படம் இடம் பெற வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்திடம் உரிய, சரியான காரணங்களைத் தெரிவித்து அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும், அனுமதி அளிப்பதும், அளிக்காததும் அவரவர் விண்ணப்பத்தைப் பொறுத்தது என்றும் கூறியுள்ளனர் நீதிபதிகள்.

Related Posts:

«