அரசை கவிழ்க்க திட்டமிடும் மஹிந்த – பலியாகும் மக்கள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றமானது நிச்சயமாக ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சியை எதிர்த்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றமை அவதானிக்கப்பட கூடிய ஒன்றே.

எந்தவொரு வகையிலாவது நாட்டில் அன்றாடம் குழப்ப நிலை மட்டும் மாறாது இருக்கவேண்டும் என்பதே நல்லாட்சிக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்பவர்களின் திட்டமாக காணப்பட்டு வருகின்றது.

அண்மையில் விடுதலைப்புலிகள் என்ற கூற்று வலுப்படுத்தப்பட்டு வந்தது அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் இடம் பெற்றது. தற்போது எந்த இடத்தில் ஆட்சிக்கு எதிராக காய்நகர்த்த முடியுமோ அவை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது என்றே கூறவேண்டும்.

குறிப்பாக தற்போது மலையக மக்கள் சம்பள உயர்வு கோரி பாரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் இதற்கு முன்னரான ஆட்சியிலும் காணப்பட்ட ஒன்றே.

ஆனால் இவை அப்போதைய காலகட்டத்தில் கவனிக்கப்படவில்லை ஆனால் தற்போது இவை நடாத்தப்படுவது உண்மையில் மக்களின் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காகவா அல்லது அரசியல் மாற்றத்திற்காக திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சிகளா என்ற வகையில் நோக்கப்படவேண்டும்.

அண்மையில் மஹிந்த நுவரெலியாவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதே காலகட்டத்தில் தான் மஹிந்த தலைமையானது இலஞ்சம் கொடுத்து பல்வேறுபட்டவர்களை தன் பக்கம் சேர்த்து ஆதரவு தேட முற்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.

மஹிந்தவின் அந்த திடீர் பயணத்தை தொடர்ந்தே மலையத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வரத்தொடங்கியது. தற்போதும் மலையக மக்களின் கோரிக்கைகளுக்காக மஹிந்தவின் குடும்ப உறுப்பினராக இருக்கும் ஒருவர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளார்.

மதுஷா ரணதுங்க எனும் யுவதி சமீபகாலமாக அரசியல் பிரவேசத்திற்காக செயற்பட்டு வருகின்றார். மஹிந்த ஏற்பாடு செய்த பாதயாத்திரையிலும் முக்கிய பங்கினை வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை வருடகாலமும் கவனிப்பாரற்று இருந்த மக்களுக்கு தற்போது உதவி செய்ய நினைப்பது அரசியல் இலாபத்திற்காகவா?

இதேவேளை நாட்டில் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் மஹிந்த தரப்பு தேடிவருவதோடு, மலையகத்தில் பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கே அதிக ஆதரவு காணப்பட்டு வருகின்றமை முக்கிய விடயம் இதனை தற்போது தோட்டத் தொழிலாளர்கள் வாயிலாக உடைக்க முற்படும் செயலாகவே ஒரு தரப்பினர் பார்க்கின்றனர்.

எவ்வகையிலும் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக மக்கள் பலிவாங்கப்படாமல் அடிப்படை உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டால் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டாலும் அவை நல்லாட்சியாக காணப்படும் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«