ஆக்டோபர் 24 ஆம் திகதி ஐ.நா சபைக்கான தினம் : 5 முக்கிய தகவல்கள்

1. 1948 ஆம்  ஆண்டு ஆக்டோபர் 24 ஆம் திகதி முதல் ஐ.நா சபைத் தினம் கொண்டாடப் பட்டு வருகின்றது. 1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட போது வெறும் 45 உறுப்பு நாடுகளையே கொண்டிருந்த ஐ.நா சபையில் இன்றைய தினம் 193 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன இறுதியாக 2011 ஆம் ஆண்டு தென் சூடான் ஐ.நா சபையில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது.

2. இந்த வருடத்தின் ஐ.நா தினத்துக்கான கருப்பொருளாக ‘சுதந்திரம் முதலாவது!’ (Freedom first!) என்பது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

3. 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான அஜெண்டா இனை இவ்வருடம் ஐ.நா தயாரித்து செயற்படத் தொடங்கியுள்ளது.

4. இம்முறை ஐ.நா தினத்தை உள்ளூர் கொண்டாட்டங்களுடன் சேர்த்து பல்வேறு வகைப் பட்ட நாடுகள் அனுசரித்துள்ளன.

5. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற்ற உலகப் பிரசித்தி பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான எம் எஸ் சுப்புலட்சுமி இனைக் கௌரவிக்கும் தபால் தலையை இம்முறை ஐ.நா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எம் எஸ் சுப்புலட்சுமியே ஐ.நா சபையில் இசைக் கச்சேரியை முதலில் நடத்திய இந்திய பாடகர் ஆவார். ஆக்டோபர் 23 ஆம் திகதி 1966 ஆம் ஆண்டு இவர் ஐ.நா சபையில் பாடிய போது ஆங்கிலத்திலும் சில வரிகள் பாடியிருந்தார்.

ஐ.நா சபையில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடியதற்கான YouTube வீடியோ இணைப்பு கீழே:

Related Posts:

«