ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்… காலக்கெடு இல்லை: உணவுத்துறை

சென்னை: ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் அதே நேரத்தில் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை என உணவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆதார் எண்களை ஆதார் எண்களுடன் இணைக்க நவம்பர் 1ம் தேதியுடன் இணைக்க கடைசி நாள் என்று செய்தி வெளியானது. இதனால் இதுவரை ஆதார் கார்டு பெறாதவர்கள் குழப்பம் அடைந்தனர்.

Aadhaar cards link with Ration cards: No deadline

இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி குழப்பத்தைப் போக்கிடும் வகையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து முறையான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

உணவுத்துறை அறிவிப்பு

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் கார்டு

நாடு முழுவதும் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் காலக்கெடு டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. 2017ம் ஆண்டு முதல் புதிய ரே‌ஷன்கார்டு ஸ்மார்ட்கார்டு வடிவில் வழங்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில், ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதார் எண் அவசியம்

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால் இதற்காக காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழக்கம்போல் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை

ஸ்மார்ட் கார்ட் பெற, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தமிழக உணவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில், ஆதார் அட்டையைக் கொண்டு வந்தால்தான் ரே‌ஷன் பொருட்களைத் தருவோம் என்று கடைக்காரர்கள் கூறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/ck9ikfv3Xf8/aadhaar-cards-link-with-ration-cards-no-deadline-265825.html

Related Posts:

«