ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வே துறைக்கு இரண்டு மடங்கு இலாபம்

ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வே துறைக்கு இரண்டு மடங்கு இலாபம் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


 அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆன் லைன் டிக்கெட் விற்பனை முறை அமலுக்கு வந்த நிலையில், ஆன் லைன் டிக்கெட் விற்பனையில் 20 ஆயிரம் கோடி லாபத்தை ரயில்வே துறை ஈட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து ஆன் லைன் டிக்கெட் விற்பனையை மேலும் துரிதப் படுத்த மத்திய அரசு, அதற்கான தொழில் நுட்பத்தில் இணையத் தளத்தை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதாவது 1 மணி நேரத்தில் 2 ஆயிரம் டிக்கெட்டுக்களை விற்கும்படியான இணைய தளத்தை மாற்றி, ஒரு மணி நேரத்தில் 7 ஆயிரம் டிக்கெட்டுக்களை விற்பனை செய்யும் திறனுடன் இணைய தொழில் நுட்பத்தை மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

Related Posts:

«