ஆர்யாவை கண்டால் அலர்ட் ஆகும் மியா

‘அமரகாவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் மியா ஜார்ஜ். பொதுவாக எந்த ஹீரோயின் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தாலும் அவர்களை நேரடியாக சந்தித்து தன் அன்பை வெளிப்படுத்திவிடுகிற வழக்கம் ஆர்யாவுக்கு உண்டு.


சேட்டன் தேசத்திலிருந்து கிளம்பும்போதே, ‘ஆயாள் ஊர்ல ஆர்யான்னு ஒண்ணு இருக்கு’ என்று யாரோ ஓதி அனுப்பினார்கள் போலும். ஆரம்பத்திலிருந்தே ஆர்யாவிடம் ரியாக்ஷன் காட்டவில்லை மியா. தனிவலைக்கு அடங்காத மீனை, கூட்டுவலை கொண்டு பிடித்துவிடுகிற வழக்கம் உண்டுதானே?

தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் சொல்லி மியாவுக்கு சான்ஸ் வாங்கித்தர முயன்றாராம் ஆர்யா. ஆனால் எதற்கும் வளைந்து கொடுக்காத மியா, இப்போது விஷ்ணு நடிக்கும் இன்று நேற்று நாளை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஷ்ணுவும் ஆர்யாவும் ஃபிரன்ட்ஸ். அடிக்கடி படப்பிடிப்புக்கு ஆர்யா வந்தாலும், மியாவின் வணக்கம் வணக்கத்தோடு நின்று கொள்வதுதான் சிறப்பான செய்தி.

Related Posts:

«