ஆஸியை தோற்கடித்து இலங்கை அணி மீண்டும் வெற்றி

இலங்கை – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற 3 வது ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 74 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் நுவன் குலசேகர 5 விக்கெட்டுக்களையும், மாலிங்க 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய குலசேகர தனது பெஸ்ட் ஸ்கோரை இன்று பதிவு செய்தார்.

பதிலுக்கு 75 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியும் ஆரம்பத்தில் சிறிது தடுமாறியது. ஒரு கட்டத்தில், 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. எனினும், தரங்க, பெரேரா ஆகியோ ர் சிறப்பாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து இலங்கை அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இலங்கை முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி சிட்னியில், ஜனவரி 20ம் திகதி நடக்கிறது.

Related Posts:

«