இங்கிலாந்துடனான ஒரு நாள் போட்டிக்கு ஷேவாக் நீக்கம்

இங்கிலாந்துடனான ஒரு நாள் தொடருக்காக தெரிவாகியுள்ள இந்திய அணியிலிருந்து ஷேவாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் படேல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு கமிட்டி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஷேவாக் கடந்த போட்டிகளில் வெளிப்படுத்திய மிக மோசமான துடுப்பாட்டத்தை அடுத்து அவர் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கௌதம் கம்பீர், ரோஹித் ஷர்மா ஆகியோரும் சமீபகாலமாக ஃபோர்மில் இல்லாத போதும், அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷேவாக்கிற்கு பதிலாக சட்டீஸ்வர் புஜாரா இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு ஷேவாக்குக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுக்க இந்திய தெரிவுக்குழு யோசித்த போதும், தோனியின் நேரடி தலையீட்டால் ஷேவாக் நீக்கப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு பதில் அஜிங்க்யா ராஹேன் சேர்த்துக்கொள்ளப்பட்ட போதும் அவரும் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தார். எனினும் ஷேவாக் ஃபீல்டிங்கிலும் மோசமாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளார். இருந்த போதும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கு அவர் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறக்கப்படவுள்ளார்.

இங்கிலாந்துடனான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கும் களமிறக்கப்படவுள்ள இந்திய அணி வீரர்கள் விபரம் : தோனி, கௌதம் கம்பீர், ராஹேன், புஜாரா, விராத் கோல், ரோஹித் ஷர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா, அஷ்வின், ஜடேயா, மிஷ்ரா, இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர் குமார், அஷோக் திந்தா, ஷாமி அஹ்மட்

Related Posts:

«