இடைத்தேர்தல்: அமைச்சர்கள், எம்பிக்கள் என 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 24 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்ள.

ADMK head office has appointed a 24 member for 4 constituency

அரவக்குறிச்சி தொகுதிக்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஏ.அன்வர்ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் தொகுதிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ், ஒ.எஸ்.மணியன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.துரைக்கண்ணு, ஜி.பாஸ்கரன், எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ப.குமார் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

ADMK head office has appointed a 24 member for 4 constituency

புதுவை நெல்லித்தோப்பு தொகுதியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலமைச்சரும் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/XwhQfbCNPVs/admk-head-office-has-appointed-24-member-4-constituency-265784.html

Related Posts:

«