இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் Infinite Love! (வீடியோ)


A.R.Rahman's infinite love

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் Infinite Love (எல்லையற்ற அன்பு) எனும் குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது. ஓஸ்கார் நாயகனின் குரலில், அவரது இசையமைப்பில் வெளிவந்துள்ள இப்பாடலை Paul Boyd இயக்கியுள்ளார்.

7 நிமிடம் கொண்ட இப்பாடல், உலகம் அன்பால் எப்படி கட்ட(டு)ப்பட்டது என்பதனை அழகாக உணர்த்துகிறது. இக் காணொளியில் வரும் காட்சிகள் அமெரிக்கா, இந்தியா, ஜமேகா, ஹொங்காங் ஆகிய நான்கு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

இக்காணொளிக்காக இந்நான்கு நாடுகளுக்கும் 20 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காட்சிகளை Paul Boyd என்பவர் சேகரித்துள்ளார். மேற்குலகின் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பொதுவாக தாம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தனித்தனி இசை வீடியோ ஆல்பங்கள் செய்து, இணையத்தில் தரவேற்றம் செய்து விடுவார்கள்.

தற்போது ஆசிய இசையமைப்பாளர்களும் இந்த யுக்தியை பெருமளவு கையாள தொடங்கியுள்ளனர். இசையமைப்பாளர் PSY யின் கங்னாம் ஸ்டைல் பாடல் இதற்கு நல்ல உதாரணம். எனினும் காமர்ஷியல் நோக்கத்திற்கென அல்லாது, அர்த்தமுள்ள ஆழமான சமூக கருத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னெடுத்திருக்கும் இவ்வீடியோ இசைப்பாடல் இணையத்தில் நிச்சயம் ஒரு பிரமாண்ட சுற்று வரப்போகிறதென்பதை மறுக்க முடியாது.

இவ்வீடியோ பாடலுக்கான பாடலை எழுதியிருப்பவரும் ஏ.ஆர்.ரஹ்மான் தான். வாழ்க்கை மற்றும் கலாச்சாரங்களின் சிறந்த பண்புகளை உலகின் அனைத்து மக்களிடம் இருந்தும் எல்லையற்ற அன்பின் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.

அதிலிருக்கும் ஒற்றுமை, தனிப்பண்புகளை கொண்டாட வேண்டும் என ஹஃபிங்டன் போஸ்ட் இணையத்திற்கு இவ்வீடியோ பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். 1997ம் ஆண்டுக்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள முதலாவது Solo Single பாடல் இதுவாகும்.
Related Posts:

«