இது ஃபிஷ்மேன் ஸ்டைல் : இணையத்தை கலக்கும் புதிய பாடல்

‘One Pound Fish’ : கங்னாம் ஸ்டைலுக்கு பிறகு யூடியூப்பில் மிக பிரபலமான இப்பாடல் இது.


சிலவேளைகளில் நீங்களும் கேட்டிருக்கலாம். பாடகர் மொஹ்மட் நாசிர் (இவர் சில நாட்களுக்கு முன்னர் வரை ஒரு மீன் கடைக்காரர்)  கிழக்கு லண்டனில் இருக்கும்,  தனது மீன் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைப்பதற்காக இவர் உருவாக்கிய பாடல் ‘Long Live One Pound Fish’. தெருவில் போய் வருபவர்களுக்கு இந்த பாடலின் இசையும், பாடலில் வரும் இலகுவாக உச்சரிக்க கூடிய சொற்களும் சட்டென பிடித்துவிடவே வியாபாரம் மட்டுமல்ல நசீருன் மெல்ல பிரபலமடைய தொடங்கினார்.

அவருடன் சேர்ந்து நின்று போட்டோ எடுக்க தொடங்கினார்கள். ஆட்டோகிராஃப் வாங்கினார்கள், வெளிநகரங்களுக்கு சென்றால் சட்டென அடையாளம் கண்டு கொண்டார்கள்.  இப்படி புகழடைய தொடங்கிய நசீர் உண்மையில் ஒரு பிரிட்டனில் தஞ்சம் கோரிய ஒரு அகதி.

இப்போது அவரது தஞ்சக்கோரிக்கையில் ஒரு சில சிக்கலால் பாகிஸ்தனானுக்கு திரும்ப வேண்டிய நிலை. ஆனால் அதற்குள் அவரது ரசிகர் ஒருவர் அவரை கொண்டே உருவாக்கிய One Pound Fish வீடியோ பாடல் யூடியூப்பில் படு ஹிட்டாகிவிட்டது.  அவ்வளவு தான். நசீர் இப்போது உலக பிரபலம். பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பட்ட போது லாகூர்  விமான நிலையத்தில் அவரது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரமாக நசீரை வரவேற்க பூரித்து போய்விட்டார் அவர்.


கங்னாம் ஸ்டைல் பாடல் இன்று உலக அளவில் ஒரு பில்லியன் views கடந்து வெற்றி நடைபோடுகிறது எனில் அதற்கு தென்கொரிய பாடகர் Psyயின் கிரியேட்டிவ் திறனும், நடன அசைவுகளும் மட்டும் காரணமல்ல. யூடியூப்பும், இணைய உலகமுமே முதற்காரணம்.

அதே தான் இங்கும் முதன்மை காரணியாக வெற்றி பெற்றுள்ளது. Psy போன்று ஒரு இசைப்பாடகர் மட்டுமல்ல. ஒரு மீன் கடைக்காரர் கூட இணையத்தினால் வெற்றி பெற முடியும். இங்கு தேவை கிரியேட்டிவ் திறன் மட்டுமே என்கிறது இந்த நிகழ்வு.


நம்புங்கள். 7 மில்லியன் ஹிட்ஸ் கடந்து யூடியூப்பில் ஓடிக்கொண்டிருக்கும் One Pound Fish பாடல்,  இங்கிலாந்தின் இசைப்பாடல் பட்டியலில் 29வது இடத்தை பிடித்துள்ளது.  

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினத்தின் அஞ்சலி நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் தொலைக்காட்சி சேவைகள், நசீர் லகூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும், தமது ஒளிபரப்புக்களை நிறுத்திவிட்டு லாஹூர் பக்கம் கமெராவை திருப்பிக்கொண்டன..

‘நான் இனி இசைத்துறையிலேயே அதிக கவனம் செலுத்த போவதாக இப்போது கூறியுள்ள நசீர், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கும் One Pound Fish பாடலை கொண்டு செல்ல போகிறாராம்.

நசீரின் செவ்வி

இது தான் One Pound Fish : வீடியோ பாடல்


 இது தான் நசீர் மீன் கடைக்காரராக இருந்த போது உண்மையாக பாடிய பாடல்

Related Posts:

«