இந்தியப் பிரதமர் மோடி மீண்டும் இலங்கை வருகிறார்!

இந்தியாவின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஹற்றன் -டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கும் நோக்கிலேயே அவர் இலங்கை வரவுள்ளார்.

அடுத்த வருடம் வெசாக் போயா தினம் அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் இந்த வைத்தியசாலை பிரதமர் மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பீ.நடா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்று வரும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் 69வது மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்திருக்கும் இந்திய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சுகாதார பிரதிநிதிகளுடன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Posts:

«