இந்தியாவின் திட்டத்தை நிராகரித்த இலங்கை..!

திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கையின் அரசாங்க ஊடகத்தை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இதற்கான ஆலோசனையை தெரிவித்திருந்தார்.

எனினும் சூரியக்கதிர் மின்சாரதிட்டத்தை தாம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள்,

சம்பூர் அனல் மின்சாரமைய திட்டத்துக்கு பதிலாக இந்தியா மேற்குகரை இயற்யை வாயுவை பயன்படுத்தி 500 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மையத்தில் கெரவலப்பிட்டியவில் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டெகொடவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Posts:

«