இந்தியா தாக்குதல் நடத்தவில்லை: மறுக்கிறது பாகிஸ்தான்

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக கூறுவதில் உண்மையில்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இதுகுறித்து, அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. அதற்கு பதிலாக அவர்கள், எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது.

ஆனால், தீவிரவாதிகள் மீது தாக்கியதாக இந்தியா தவறான தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறது. இதெல்லாம் வெறும் மீடியா விளம்பரத்திற்காகத்தான்.

மற்றபடி எந்த உண்மையும் இல்லை’ என கூறி உள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமை ச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் நேற்று இரவு (நேற்று முன்தினம்) பாகிஸ்தானில் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

அதற்கு வலுவான பதிலடி தந்தோம்’ என்றார். அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்,

இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ‘நாங்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

அமைதி நீடிக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை பலவீனமாக நினைக்க கூடாது. இந்திய படையினரின் அத்துமீறிய தாக்குதலால், பாகிஸ்தான் படையின் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்’ என்று கூறி உள்ளார்.

Related Posts:

«