இந்தியா – பாக் போட்டி : தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது சர்ச்சையில்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோனிக்கு Man of the Match பரிசு கொடுக்கப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


அப்போட்டியில் தோனி எடுத்த ஸ்கோர் 36 ரன்கள் மட்டுமே. பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடிய போது மிஸ்பா உல் ஹக்கின் கேட்ச் ஒன்றையும் அவர் நழுவவிட்டிருந்தார்.  தோனியின் உற்சாகமூட்டும் தன்னம்பிக்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியதாலும், தோனியின் தீர்மானங்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையிலும் தோனி ஆட்டநாயகன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக அறிவிப்பாளர் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

எனினும், தோனியை விட அன்றைய விருதை வெல்ல தகுதியானவர்கள் பலர் இருந்ததாக மேலும் சில அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக ஜடேஜாவை கூறலாம். இறுதி நேரத்தில்  அவர் எடுத்த 27 ரன்கள் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதோடு பந்துவீச்சில் உமர் அக்மலை வீழ்த்தியதுடன், ரன்களை மிச்சப்படுத்தியது, அபாரமான ஃபீல்டிங், சிறப்பான கேட்ச் என அவர் மிகத்திறமையாக விளையாடியிருந்தார்.

பாகிஸ்தானின் சயீத் அஜ்மலையும் இவ்விருதுக்கு பரிந்துரைத்திருக்கலாம். 24 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். புனவேஷ்வர் குமாரும் மிகச்சிறப்பான ஆரம்ப பந்துவீச்சை வழங்கியிருந்தார். ஏன் இவர்கள் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோற்ற போதும் தோனிக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது. அப்போட்டியில் ஜாம்ஷெத் சதமடித்து பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் அவருகு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை. தோனி அப்போட்டியில் எடுத்த சதத்திற்காக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஆட்டநாயகன் விருது வெற்றி பெற்ற அணிக்கே வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அணியினர் அப்போட்டி முடிவில் அறிவிப்பாளர்களிடம் உத்தியோகபூர்வமற்ற முறையில் முறையிட்டுள்ளனர்.

Related Posts:

«