இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை பிசிசிஐ நியமித்து உள்ளது. 


இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தற்காலிக பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்து உடனடியாக நியமிக்க வேண்டியக் கட்டாயச் சூழலில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 21 விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளது பிசிசிஐ. இதில் பயிற்சியாளர் யார் என்பதைத் தேர்வு செய்ய சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ்.லக்ஷ்மன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை பிசிசிஐ நியமித்து உள்ளது. இவர்கள் நேர்முகத் தேர்வை நடத்துவார்கள் என்றும் தெரிய வருகிறது. 

இந்தக் குழு வருகிற 22ம் திகதிக்குள் ஒரு மனதாக பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்து அறிவிக்க வேண்டும் என்பது பிசிசிஐ கோரிக்கை. ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே உள்ளிட்டவர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

 

Related Posts:

«