இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


பிசிசிஐ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லக்ஷ்மணன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை நியமித்தது. இந்தக் குழு அணில் கும்பிளே உள்ளிட்ட 7 பேரை குழு நேர்காணல் செய்தது. இதில் அணில் கும்பிளே கொல்கத்தா சென்று நேர்காணலில் கலந்துக்கொண்டார். ரவி சாஸ்திரி, இணைய தளம் மூலம் நேர்காணலில் கலந்துக்கொண்டனர். 

அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தங்களது நேர்காணலில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக அளித்துள்ளது சச்சின் அடங்கிய குழு. இதையடுத்து இன்று பிசிசிஐ அணியின் பயிற்சியாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐஅறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts:

«