இந்திய கிரிக்கெட் : புகழில் உள்ளவருக்கு அல்ல, ஃபோர்மில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்! : வக்கார் யூனிஸ்

பாகிஸ்தானுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை பறிகொடுத்ததை அடுத்து இந்திய அணியில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனும் கருத்து மீண்டும் வலுப்பெற்றுள்ளது.


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கிரிஷ் சிறீகாந்த், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆகியோருடன் சி.என்.என் – ஐ.பி.என் நேற்று இது தொடர்பில் மேற்கொண்ட செவ்வியின் போது,

சிறீகாந்த் கூறியவை ‘நான் இப்போது வெளிப்படையாகவே கூறுகிறேன். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கு தோனி கேப்டனாக நீடிக்க கூடாது. அவர் T20 க்கு மட்டுமே பொருத்தமான கேப்டன். கடந்த ஐந்து வருடங்களாகவே இந்திய அணிக்காக தோனி மிகப்பெரிய சேவையை செய்துள்ளார். இப்போது அவர் உடல் நிலையாலும், மன நிலையாலும் சோர்ந்து விட்டார். அவர் நன்றாக துடுப்பாடுகிறார். அதிலேயே கவனத்தை செலுத்தட்டும். விராத் கோலியை கேப்டனாக்குவோம்  தோனியை கேப்டன் பதவியிலிருந்து கீழிறகக் வேண்டும் என்பதே நான் இனி செய்ய நினைக்கும் பெரிய மாற்றமாக இருக்கும். புதிதாய் சிந்திக்க கூடிய, ஒருவர் அணிக்கு தேவை’ என்றார்.

வக்கார் யூனிஸ்  கருத்து தெரிவிக்கையில் ‘பாகிஸ்தானின் மிகத்திறமையான விளையாட்டுக்கு பாராட்டுக்கள். ஆனால் இந்திய அணியில் பிரச்சினை உண்டு என்பதை நிச்சயமாக நாம் கூற முடியும். உலக கோப்பையை தவிர்த்து பார்த்தால் கடந்த காலங்களில் இந்தியா வீழ்ச்சி அடைந்தே வந்திருக்கிறது. ஆகவே இப்போது மாற்றம் அவசியமானது. இந்தியா இப்போது துடுப்பாட்ட வீரர்களின் புகழ், கடந்த கால ஓட்ட எண்ணிக்கை சராசரி என்பவற்றை பார்க்காது யார் ஃபோர்மில் இருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். போட்டியை வெல்வதே மிக முக்கியம். புஜாரா, ராஹேன் மேலும் பல புதியவர்களுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார்.

2011 உலக கோப்பைக்கு பின்னர் இந்தியா விளையாடிய 38  ஒரு நாள் போட்டிகளில், 21 இல் வெற்றி பெற்றிருக்கிறது 14 இல் தோல்வி அடைந்திருக்கிறது. இரண்டில் சமநிலை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

«