இந்திய டூருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில், நல்ல வேளை அவர் இல்லை!

லண்டன்: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் 16 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

England name unchanged 16-man Test squad for India tour

முதலாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நவம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. விசாகப்பட்டினம், மொகாலி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து இங்கிலாந்து அணி நேறஅறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தக்கூடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், தோள்பட்டை காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணம் அடையாததால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகும். ஏனெனில் 119 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆண்டர்சன் 463 விக்கெட்டுகளை வீழ்த்தியவராகும்.

இங்கிலாந்து அணி விவரம்: அலஸ்டயர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜாபர் அன்சாரி, பேர்ஸ்டோ, ஜேக்பால், கேரி பேலன்ஸ், காரெத் பேட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவன் பின், ஹசீப் ஹமீது, அடில் ரஷித், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தற்போது வங்கதேச தொடரில் இங்கிலாந்து ஆடிக்கொண்டுள்ளது. அதே அணிதான் இந்தியாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிட்சுகளில் ஆடி பழக்கம் இருப்பது, இந்திய பிட்சுகளில் ஆடவும் உதவும் என்பது இங்கிலாந்து அணி நிர்வாக திட்டம்.

Source http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/FzPpYr69Two/england-name-unchanged-16-man-test-squad-india-tour-265826.html

Related Posts:

«