இந்திய தேசிய கொடி உருவாகிய வரலாறு!

நமது இந்திய தேசிய கொடியை முதன் முதலில் உருவாக்கியவர் யார் என்று தெரியுமா? அவர்தான் பிங்காலி  வெங்கையா!


பிங்காலி வெங்கையா, 30 நாட்டு கொடிகளை ஆராய்ந்த பின்னர், சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் கொண்ட கொடியை உருவாக்கினார்.

அதனை 1921ம் ஆண்டு பெஸவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தியிடம் கொடுத்தாராம். அதன் பின்னர் பிங்காலி வெங்கையா உருவாக்கிய கொடியின் நடுவே, சிறுபான்மை இனத்தைக்  குறிக்கும் வகையில் வெள்ளை நிறத்தை மகாத்மா காந்தி இடை புகுத்தினார் என்றும் தெரிய வருகிறது.

அதன் பிறகு ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கொடியின் நடுவில்  சக்கரத்தை பதிக்கும் யோசனையைத் தெரிவித்தாராம்.

இந்த கொடி குறித்த தீர்மானம் 1931ம் அண்டு கராச்சியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இறுதியாக கொடியில் புத்த தர்மத்தை வலியுறுத்தும் அசோகா சக்கரம் பதித்து வெளியிடப்பட்டது.

அதுவே இந்தியாவின் தேசிய கொடியாக 1947ம் ஆண்டு,   அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கொடியைத் ஆரம்பத்தில் வடிவம் கொடுத்து தயாரித்தவரான பிங்காலி வெங்கய்யா ஒரு தையல்காரர்  என்பது குறிப்பிடத் தக்கது.

Related Posts:

«