இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்

இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

வர்த்தகத்தூதுக் குழு ஒன்றுக்கு தலைமை தாங்கியே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்திய வர்த்தகத்தை மற்றும் முதலீடுகளை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் கொள்கையின் கீழ் இந்த விஜயம் ஒழுங்குச்செய்யப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தை பொறுத்தவரை, சீனா இலங்கையில் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு ஈடான வர்த்தகத்தை தேடுவதே நோக்கமாகும் என இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

எனினும் தமது விஜயத்தின்போது ஜெய்சங்கர், இந்திய இலங்கை எட்கா உடன்படிக்கை குறித்து பேச்சு நடத்தமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

«