இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: ரணில்

எதிர்க்கட்சிகள் பல்வேறு கொள்கைகளை பின்பற்றினாலும் ஜனநாயகம், பொதுமக்கள் சுதந்திரம் போன்ற பொதுக் காரணிகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

நீதிக்கும் அநீதிக்கும் இடையிலும், நீதித்துறைக்கும் பாராளுமன்றிற்கு இடையிலும், கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த குழப்ப நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது. இந்தப் பிரச்சினைகளினால் பொருட்கள் சேவைகளின் விலை உயர்வடைந்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையினால் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் சமையலறை யுத்தம் உக்கிரமடைந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Posts:

«

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *