இனவிகிதாசாரம் தொடர்பில் அமிலப்பரீட்சை அவசியம்; இரா.சம்பந்தனுடனான சந்திப்பில் ஐ.நா. அறிக்கையாளர் தெரிவிப்பு! 

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா கொழும்பில் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இனவிகிதாசாரம் தொடர்பில் அமிலப்பரீட்சை நடத்தவேண்டும். அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இராணுவத்தில் இருந்தால் அந்நாட்டில் சகவாழ்வு, சகலருக்கும் சமமான உரிமை கிடைக்கும் எனக் கூறமுடியாது. எனவே, இது தொடர்பில் சரியான சோதனை நடத்தப்பட வேண்டும். இதனையே, அமிலப்பரீட்சை என்று கூறுவார்கள் என்றும் ரீட்டா இசாக் நதியா கூறியுள்ளார்.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்வது தொடர்பில் உலக நாடுகளுக்குத் தெரியாத நிலையே காணப்படுவதாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தனது இலங்கை விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பான சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் வெளியிடுவார்.  மார்ச் மாத மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related Posts:

«