இனி படங்கள் தயாரிக்க மாட்டேன்: பிரபு சாலமன்

இயக்குனர் பிரபுசாலமன் தனது GOD பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கும் படம் ‘ ரூபாய்’. பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தில் நடித்த சந்திரனும், ஆனந்தியும் இதில் நடிக்கிறார்கள். à®ªà®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ ஆடியோ இன்று à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à¯. அதில் பேசிய பிரபு சாலமன், ” இனி நான் படங்கள் தயாரிக்க போவதில்லை. எனது உதவி இயக்குனர் அன்பழகனின் ‘சாட்டை’ கதை திரைப்படமாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் God பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து அந்தப் படத்தை தயாரித்தேன்.


 
ஒரு படத்தை இங்கு தயாரித்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் அல்ல. தற்போதும், அவரது அடுத்த கதையான ரூபாய்க்கும் இதே பிரச்னை தான்.அதனால்தான் மீண்டும் தயாரிக்க முடிவு செய்தேன்.திரைப்படங்கள் தயாரிக்க இங்கு இணக்கமான சூழ்நிலை உருவாக வேண்டும்.இனி நான் படங்கள் தயாரிக்க போவதில்லை. ” என்றார்.

Source http://feedproxy.google.com/~r/Vikatan_Entertainment_News/~3/4eEEmwSH9Zo/article.php

Related Posts:

«