இன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம்!

இன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகலம் முதன் முறையாக தேசிய அளவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


மகாகவி பாரதி என்று அழைக்கப்படும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் எத்தனையோ எழுச்சிமிகுப் பாடல்களைப் பாடி இருந்தாலும், அவரின் இஷ்ட தெய்வமான ஆதி பராசக்தி மீது அவர் பாடிய பாடல்கள், அடுத்து ஒடி விளையாட்டு பாப்பா என்று குழந்தைகளுக்கு ஆதரவாக அவர் பாடிய பாடல்கள் என்றும் நமது நெஞ்சிலிருந்து நீங்கா இடம்ப்பெற்றவை. மேலும், நமக்கத் தேவைப்படும்போது ஒரு சப்போர்ட்டுக்காக இந்த பாடல்களை நாம் மேற்கோள் காண்பித்துப் பேசுவதும் இன்றுவரையான வழக்கம்தான்.

அப்படிப்பட்ட மாபெரும் கவிஞனின் 133 வது பிறந்தநாளை தமிழர்கள் பெருமைப்படும் வகையில் தேசிய அளவில் இன்று கொண்டாட பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்பாடுகள் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. டெல்லியில் பாரதியாரின் திரு உருவ படத்துக்கு அனைத்து மத்திய அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். பாரதியார் வாரணாசியில் வசித்த அவரது இல்லம் தேசிய நினைவிடமாக அறிவிக்கப்படும் என்றும் இன்று மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலும் அரசு முதல் பல அமைப்புக்கள் வரை பாரதியாரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

Related Posts:

«