இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான கடைசி T20

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டி நடக்க உள்ளது.


இதுவே இந்த தொடரின் கடைசி T20 என்பது குறிபிடத் தக்கது.

இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழன் அன்று நாக்பூரில் நடைபெற்ற T20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த முறை போட்டியைக் கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி, T20 முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதும் இந்தியா வெற்றி பெற்றதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ள நிலையில், இன்றைய நாள் போட்டி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Posts:

«