இன்றைய பலன்கள் 01-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். நம்பிக்கையுடன் உதவுகிற நண்பரிடம் கூட, நிதானித்து பேசுவது அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். தவிர்க்க இயலாத கூடுதல் பணச்செலவு உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மனதிற்கு சாந்த குணம் தரும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, உறவினர்களின் மனப்பூர்வமான வாழ்த்து பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவு அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். குடும்ப அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு. – கலாபம்

மிதுனம்:
இன்று, சிறு வேலையும் நிறைவேற, கூடுதல் முயற்சி தேவைப்படும். சக தொழில் சார்ந்தவர்களுடன், சுமுக நட்பு பாராட்டுவது நல்லது. உற்பத்தி, விற்பனை குறைந்த அளவில் இருக்கும். சேமிப்பு பணம், செலவுக்கு பயன்படும். மாணவர்கள் சாகச விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடாது. – கலாபம்

கடகம்:
இன்று, உற்சாக மனம், செயல் திறமையுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு எளிதில் பூர்த்தியாகும். பணவரவில் லாபவிகிதம் அதிகரிக்கும். நிலுவை பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். – கலாபம்

சிம்மம்:
இன்று, உயர்வான செயல்களை, இஷ்ட தெய்வ ஆசியுடன் நிறைவேற்ற அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெளியூரிலிருந்து, சுப செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகள், சமரச பேச்சில் சுமுகத் தீர்வு காண்பர். – கலாபம்

கன்னி:
இன்று, பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை சிறக்க, புதிய யுக்தி பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியத் தேவைகளை, சிக்கன பணச்செலவில் மேற்கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

துலாம்:
இன்று, அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேசுவதால் சிரமம் வரலாம். மனதை பக்குவப்படுத்தி, சொந்தப் பணியில் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். பணபரிவர்த்தனையில், பாதுகாப்பு முறை பின்பற்றவும். பெண்கள் தங்க நகை இரவல், கொடுக்க வாங்கவேண்டாம். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, மதிநுட்பத்துடன் பணிபுரிவீர்கள். செயல்களில் முழு அளவிலான நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் உண்டாகும். உபரி பணவரவு கிடைக்கும். உறவினர் முன்னர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். – கலாபம்

தனுசு:
இன்று, மனதில் புதுமையான எண்ணங்கள் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணவரவு பெறுவதில் இருந்த இடையூறு விலகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, உங்களின் திட்டம் நிறைவேறும் முன், முடிவைப்பற்றி பிறரிடம் பேசவேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரிசெய்வது அவசியம். பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை உண்ணக்கூடாது. – கலாபம்

கும்பம்:
இன்று, உங்களிடம் சுயலாபம் பெற, சிலர் பணம் கடனாக தர முன்வருவர். அவசியமற்ற உதவியை தவிர்த்திடுவீர்கள். கூடுதல் உழைப்பு உற்பத்தி, விற்பனையை சீராக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெற, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். – கலாபம்

மீனம்:
இன்று, குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில், அதிக அக்கறை கொள்வீர்கள். தொழிலில் அளப்பரிய, வளர்ச்சி நிலை உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அழைப்பு வரும். புத்திரரின் நற்செயல், பெருமை தேடித்தரும். – கலாபம்

Related Posts:

«