இன்றைய பலன்கள் 02-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, நீங்கள் எதிர்கொள்ளும் சில நிகழ்வுகள், மனதில் சஞ்சலம் உருவாக்கும். இயல்பு மாறாமல் செயல்பட முயற்சிப்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை குறைந்த அளவில் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவனநடை நல்லது. – கலாபம்

ரிஷபம்:
இன்று, எதிர்கால நலன் பற்றிய அக்கறை கொள்வீர்கள். செயல்களில் சுதந்திர உணர்வு பிரதிபலிக்கும். கூடுதல் உழைப்பால் தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். – கலாபம்

மிதுனம்:
இன்று, முக்கியமான பணியை நிறைவேற்ற தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் அனுகூலத் தன்மை பாதுகாப்பது நல்லது. புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். நண்பர் வாங்கும் பொருளுக்கு, நீங்கள் பேரம் பேச வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும். – கலாபம்

கடகம்:
இன்று, சவால்களை ஏற்று செயல்பட எண்ணம் வளரும். உங்களின் தனித்திறமை, அன்புக்கு உரியவர்களிடம் பாராட்டு பெறும். தொழிலில் அபரிமிதமான அளவில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். – கலாபம்

சிம்மம்:
இன்று, நண்பரின் பணி சிறக்க இயன்ற அளவில் உதவுவீர்கள். உங்களைப் பற்றிய நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். தாராள பணச்செலவில், குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும். – கலாபம்

கன்னி:
இன்று, கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். பிறரிடம் பேசுவதில் நிதான அணுகுமுறை நற்பலன் தரும். தொழிலில், வியாபாரம் சீராக இருக்க, மாற்று உபாயம் பின்பற்றுவது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லவேண்டாம். – கலாபம்

துலாம்:
இன்று, சிலரை நம்பி ஏமாறுகிற சூழ்நிலை ஏற்படலாம். மனதில் நியாய சிந்தனைகளுக்கு மட்டும் இடம் தருவது நல்லது. தொழிலில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு அவசியமாகும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால், மனம் இலகுவாகும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, சற்குணம் நிறைந்தவரின் நட்பை பெறுவீர்கள். வாழ்வில் கூடுதல் வளம் பெற, புதிய ஆலோசனை கிடைக்கும். தொழிலில் வியாபாரத்தில் திருப்திகர அளவில் வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். – கலாபம்

தனுசு:
இன்று, உங்களின் பணித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை அதிகரித்து, லாபவிகிதம் கூடும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். அரசியல்வாதிகள் பொறுப்பான பதவி பெற அனுகூலம் உண்டு. – கலாபம்

மகரம்:
இன்று, சிலரது புகழ்ச்சியால் கைப்பொருளை செலவு செய்கிற நிலை ஏற்படலாம். நிதானம் பின்பற்றுவது அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறு சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். – கலாபம்

கும்பம்:
இன்று, உங்களின் நற்குணம் உணராதவரிடம், சொந்த விஷயம் பேசவேண்டாம். புதிய முயற்சியை செயல்படுத்த அதிக பணம் தேவைப்படும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணச்செலவில் சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும். – கலாபம்

மீனம்:
இன்று, உயர்வு, தாழ்வு கருதாமல் எவரிடமும் பழகுவீர்கள். தொழில் வளர்ச்சி பெற, புதிய வாய்ப்பு உருவாகும். அதிகம் உழைத்து திருப்திகர அளவில் பணவரவு பெறுவீர்கள். குடும்பத் தேவையை தாராள பணச்செலவில், பூர்த்தி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். – கலாபம்

Related Posts:

«