இன்றைய பலன்கள் 03-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, பல நாள் திட்டமிட்ட பணியை, எளிதாக நிறைவேற்றுவீர்கள். நண்பரின் உதவி கிடைக்கும். தொழில் வளம் செழிக்க, புதிய வழி பிறக்கும். அதிக பணவரவில் குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர். – கலாபம்

ரிஷபம்:
இன்று, உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். அதிகஅளவில் பணி உருவாகி, சஞ்சலம் தரலாம். தொழிலில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவருக்கு உதவுவதில், நிதான நடைமுறை பின்பற்றவும். – கலாபம்

மிதுனம்:
இன்று, மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக அமையும். பணவரவு கூடுதல் அளவில் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

கடகம்:
இன்று, பிறரது ஏளன பேச்சை எண்ணி வருந்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்கள், அரசின் சட்டதிட்டம் கூடுதலாக மதித்து செயல்படவேண்டும். அத்தியாவசிய செலவுகளுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஓய்வு நேரத்தில், இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். – கலாபம்

சிம்மம்:
இன்று, நற்குணம் உள்ள புதியவரின் நட்பு கிடைக்கும். ஆன்மிக கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, மனஉறுதியுடன் புதிய பணி ஒன்றில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்பு விலகி அனுகூல சூழ்நிலை உருவாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். – கலாபம்

துலாம்:
இன்று, மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படலாம். இஷ்ட தெய்வ அருள் துணையை நம்பி பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில் இலக்கு கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். அவசியமற்ற பணக்கடன் பெற வேண்டாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். உங்களின் இயலாத சூழ்நிலையை இதமாக சொல்வது நல்லது. தொழில் வளர்ச்சி பெற, கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவீர்கள். பணவரவை விட குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். ஊட்டம் தரும் உணவு உண்பதால், உடல் நலம் ஆரோக்கியம் பெறும். – கலாபம்

தனுசு:
இன்று, மனதில் பலநாள் இருந்த குழப்பம், புதிய நிகழ்வு ஒன்றினால் தெளிவாகும். ஆரவாரம் தவிர்த்து பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சராசரி பணவரவுடன், நிலுவைப்பணமும் வசூலாகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, நிதானம் சமயோசித குணத்துடன் செயல்புரிவீர்கள். உழைப்பிற்கான நற்பலன் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரின் தொல்லை குறைந்து, பொறுப்பான பதவி பெற அனுகூலம் உண்டு. – கலாபம்

கும்பம்:
இன்று, செயல்களில் கவனச்சிதறல் உருவாகி, இடையூறு தரலாம். சக தொழில், பணி சார்ந்தவரிடம் சச்சரவு வராத அளவில் பேசுவது அவசியமாகும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். பெண்கள் கடனுக்கு கிடைக்கிறது என்று, அதிக பயன்தராத பொருள் வாங்கவேண்டாம். – கலாபம்

மீனம்:
இன்று, திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி உழைப்பு தேவைப்படும். நம்பகத்தன்மை இல்லாதவரிடம், முக்கியமான விஷயம் சொல்லக்கூடாது. தொழில், வியாபார நடைமுறை தாமத கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும். – கலாபம்

Related Posts:

«