இன்றைய பலன்கள் 04-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, வாழ்வில் கூடுதல் வளம்பெற திட்டமிடுவீர்கள். தந்தை வழி உறவினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற அனுகூலம் உண்டு. – கலாபம்

ரிஷபம்:
இன்று, உங்களின் கடந்த கால வாழ்க்கையின் சிரமம், பிறரிடம் சொல்ல வேண்டாம். புதிய அக்கறையினால் தொழில், வியாபார நடைமுறையில் உள்ள நன்மையை பெறலாம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். புத்திரரை நல்வழி நடத்துவதில், இதமான அணுகுமுறை வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்களின் நற்செயல் திறன் கண்டு, புதியவர் அன்பு பாராட்டுவர். மனதில் பெருமதிம், கூடுதல் நம்பிக்கையும் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாகும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். – கலாபம்

கடகம்:
இன்று, பொது இடங்களில் எவரிடமும், அதிக நேரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு, தாமதமின்றி சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்ப்பந்த பணக்கடனில், ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். – கலாபம்

சிம்மம்:
இன்று, இயற்கை காட்சிகளை ரசித்து மகிழ்வீர்கள். பணித்திறன் அதிகரித்து, தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள், அதிக தரம் உள்ளதாக வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, சமரச பேச்சுவார்த்தையில் சுமூகத்தீர்வு உருவாகும். – கலாபம்

கன்னி:
இன்று, குறுக்கீடு எதுவும் வராத நன்னிலை இருக்கும். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற, அனுகூலம் வளரும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விலகிய உறவினர், சொந்தம் பாராட்டுவர். – கலாபம்

துலாம்:
இன்று, கவனக் குறைவினால் சிரமம் வரலாம். தன்னைச் சார்ந்தவர்களின் சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். எதிர்பார்த்த பணவரவு பெற தாமதமாகலாம். தாயின் ஆறுதல் வார்த்தை, மன அமைதி பெற உதவும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்களை புகழ்ந்து பேசி, சிலர் சுயலாபம் பெற அணுகுவர். பணிகளில் கூடுதல் கவனம், முழு பயன் பெற உதவும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். – கலாபம்

தனுசு:
இன்று, ஆன்மிக நம்பிக்கை உள்ளவரின் உதவி கிடைத்து பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, புதிய வழிமுறை பின்பற்றுவீர்கள். பணவரவு சீராக கிடைக்கும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவை பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு சலுகைப்பயன் கிடைக்கும். – கலாபம்

மகரம்:
இன்று, முன்னர் எதிரித்தனமாக நடந்தவர், இடம் மாறுகிற புதிய சூழ்நிலை உருவாகும். மனதில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். சுறுசுறுப்பாக பணிபுரிந்து, தொழிலில் வியத்தகு வளர்ச்சி பெறுவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரரின் நற்செயல், பெருமை தேடித் தரும். – கலாபம்

கும்பம்:
இன்று, அத்தியாவசிய பணியை, தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய நுட்பங்களை பின்பற்றுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில், பணம் செலவு செய்ய நேரிடலாம். அரசியல்வாதிகள், சமரச பேச்சு வார்த்தை பின் ஒரு நாளில் துவங்கலாம். – கலாபம்

மீனம்:
இன்று, திட்டமிட்ட பணி நிறைவேற, கூடுதல் முயற்சி தேவைப்படும். அன்பு வழியை பின்பற்றி, சில நன்மை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணச்செலவில் சிக்கனம் நல்லது. மாணவர்கள், சாகச செயல்களில் ஈடுபடக்கூடாது. – கலாபம்

Related Posts:

«