இன்றைய பலன்கள் 04-12-2012 by கலாபம்

மேஷம்:
இன்று, பிறரை நம்பி நண்பர், உறவினர் எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். இதனால், அவப்பெயர் வராத சூழ்நிலை தவிர்க்கலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும். சொத்து, ஆவணம் கவனமுடன் பாதுகாக்கவும். அரசியல்வாதிகள் விவகாரங்களில், சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.
– கலாபம்

ரிஷபம்:
இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய
திட்டமிடுவீர்கள். நண்பரின் ஆலோசனை ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில்
உற்பத்தி, விற்பனை செழிக்கும். உபரி பணவரவு வந்து சேரும். வெகுநாள் வாங்க
நினைத்த பொருள் வாங்குவீர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு, சிறந்த பணிக்காக
பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.
– கலாபம்

மிதுனம்:
இன்று, சிலரது பேச்சு
உங்களை சங்கடப்படுத்தலாம். பொறுமை குணம் பின்பற்றுவீர்கள். தொழில்,
வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட
புதிய இனங்களில், பணச்செலவு அதிகரிக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை
நம்பி, அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல்நல பெற
உதவும்.
– கலாபம்

கடகம்:
இன்று, முன்னர் நீங்கள் வேடிக்கையாக நண்பரிடம் கேட்ட
உதவி கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில்,
வியாபார நடைமுறையில் புதிய வளர்ச்சி மாற்றம் உருவாகும். பணவரவும்,
நன்மையும் அதிகரிக்கும். உறவினர் சுபசெய்தி ஒன்றைச் சொல்வார்.
பணியாளர்களுக்கு சலுகைப்பயன் வந்து சேரும்.
– கலாபம்

சிம்மம்:
இன்று
வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொந்தரவு தரலாம். நிதான செயலால் நன்மை
பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். நிலுவைப்பணம்
கூடுதல் முயற்சியால் பெறுவீர்கள். ஊட்டம் நிறைந்த உணவு வகை உண்பதால், உடல்
நலம் ஆரோக்கியம் பெற உதவும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.
– கலாபம்

கன்னி:
இன்று, உங்கள் மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். புதிய யுக்தியால் செயல்களை
எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றம்
உருவாகும். பணவரவு திருப்திகரமாக கிடைக்கும். மாமன், மைத்துனருக்கு பணம்,
தேவையான உதவி செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான அனுகூலம்
கிடைக்கும்.
– கலாபம்

துலாம்:
இன்று, உங்களுக்கு கடந்த காலத்தில் தொல்லை
கொடுத்தவர், இடம்மாறிப் போகிற சூழ்நிலை ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கை
கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவை விட
அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து உபசரிப்பில்
கலந்து கொள்வீர்கள். தாயின் தேவை நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள்.
– கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்கள் எண்ணத்தில் சஞ்சலம் ஏற்படலாம். போட்டி பந்தயங்களில்
ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான உற்பத்தி,
விற்பனை இருக்கும். பணவரவு பெறுவதில் தாமதம் உண்டு. சேமிப்பு பணத்தில் ஒரு
பகுதியை முக்கிய செலவுக்கு பயன்படுத்துவீர்கள். அறிமுகம் இல்லாதவர் தருகிற
உணவுப்பண்டம் உண்ணவேண்டாம்.
– கலாபம்

தனுசு:
இன்று, உங்கள் இரக்க குணத்தினால்
மாறுபட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்கிற நிலை உண்டு. பிறருக்கு உதவி செய்வதில்,
கவனமுடன் செயல்படவேண்டும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி
செய்வது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு சிறு
அளவிலான மருத்துவசிகிச்சை உதவும்.
– கலாபம்

மகரம்:
இன்று, பிரம்மாண்ட
செயலைக்கூட புதிய யுக்தியால் எளிதில் நிறைவேற்றுவீர்கள். பூர்வ புண்ணிய
நற்பலன் துணை நின்று உதவும். தொழில், வியாபார வள்ர்ச்சியைக் கண்டு உங்களைச்
சார்ந்தவர் வியப்படைவர். உபரி பணவருமானம் வந்து சேரும். வீட்டு
உபயோகப்பொருள் வாங்குவீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன்
நடந்து கொள்வார்.
– கலாபம்

கும்பம்:
இன்று, நீங்கள் பெருமிதம் அடைகிற
வகையில், நிகழ்வு ஒன்று குடும்பத்தில் உருவாகும். தொழில், வியாபாரம்
செழித்து சமூக அந்தஸ்தில் உயர்வு காண்பீர்கள். பணவரவும், நன்மையும்
அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதியை
செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை
குறையும்.
– கலாபம்

மீனம்:
இன்று, நீங்கள் நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணி
ஒன்றை மறந்திடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர்.
தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவை சிக்கன முறையில்
பயன்படுத்துவீர்கள். கண்களின் பாதுகாப்பில், கூடுதல் கவனம்
பின்பற்றவேண்டும். உத்தியோகஸ்தர், கூடுதல் நேரம் செயல்பட்டு திட்டம்
நிறைவேற்றுவர்.
– கலாபம்

Related Posts:

«