இன்றைய பலன்கள் 05-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப்போகலாம். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய சூழ்நிலை அறிந்து பயன்படுத்தவும். நிலுவைப் பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். – கலாபம்

ரிஷபம்:
இன்று, உருவாகிற சூழ்நிலையை அனுபவமாக கருதுவீர்கள். தொழில் வளர்ச்சி பெற, நல்லோரின் உதவி கிடைக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரத்தில் நல்ல தீர்வு வரும். – கலாபம்

மிதுனம்:
இன்று, அடுத்தவரை நம்பி முக்கியமான பணியை ஒப்படைக் கூடாது. தொழிலில் வளர்ச்சி பெற, புதிய அணுகுமுறை வேண்டும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை நல்லது. அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். – கலாபம்

கடகம்:
இன்று, வெகுநாள் தாமதமான செயலில் அனுகூல திருப்பம் உருவாகும். முறையாக பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். தொழில், வளர்ச்சிப் பணி திருப்தி தரும். உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள், ஆடை, அணிகலன் விருப்பத்திற்கேற்ப வாங்குவர். – கலாபம்

சிம்மம்:
இன்று, பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் சீர்திருத்த நடைமுறை பின், ஒரு நாளில் துவங்கலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். சீரான ஓ#வு உடல்நலம் பாதுகாக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, பெரிய மனிதர்களின் உதவி பெற முயற்சிப்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு எளிதில் பூர்த்தியாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். புத்திரர் படிப்பில் முன்னேற தகுந்த ஆலோசனை சொல்வீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, சந்தோஷ எண்ணங்களினால் முகத்தில் பொலிவு ஏற்படும். கலை ரசனையுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகஸ்தர் பாராட்டு, சலுகைப் பயன் பெறுவர். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, அடுத்தவர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை முக்கிய தேவையாகும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். – கலாபம்

தனுசு:
இன்று, சிலர் சுயலாபத்திற்காக, உங்களை புகழ்ந்து பேசுவர். அவர்களிடம் விலகுவதால், எதிர்காலத்தில் சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில் இலக்கு நிறைவேற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவில் தாமதம் இருக்கும். விலை குறைவான பொருளை அதிக விலைக்கு வாங்குகிற சூழ்நிலை ஏற்படலாம். கவனம் தேவை. – கலாபம்

மகரம்:
இன்று, குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். உங்களின் பொறுப்பான செயல் பாராட்டு பெறும். தொழில் சிறந்து உபரிபணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செ#வீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் தேர்ச்சி பெறுவர். – கலாபம்

கும்பம்:
இன்று, திகைப்பு தந்த பணியை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நண்பரின் வாழ்த்து கிடைக்கும். தொழில் சார்ந்த இடையூறு விலகும். ஆதாய பணவரவில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். – கலாபம்

மீனம்:
இன்று, மனம் விரும்பாத நிகழ்ச்சியில் ஒதுங்கி இருப்பது நல்லது. அதிக உழைப்பினால், தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடையலாம். பணவரவை விட குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். பெண்கள் தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். தியானம், தெ#வ வழிபாடு மனதில் சாந்த குணம் உருவாகும். – கலாபம்

Related Posts:

«