இன்றைய பலன்கள் 06-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, சிலரது விமர்சனத்தால், மனதில் வருத்தம் கொள்வீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். குறைந்த அளவில், பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு வகை உண்பது தவிர்க்கவும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, இஷ்ட தெய்வ அருளால், புதிய முயற்சி நிறைவேறும். சமூக நடப்பில், இனிய அனுபவம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள் – கலாபம்

மிதுனம்:
இன்று, சிலர் சுயலாபம் பெற, உங்களை புகழ்ந்து பேசுவர். எதார்த்த குணம் மாறாமல் பழகுவது நல்லது. அதிக உழைப்பினால், தொழில் இலக்கு நிறைவேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் செய்ய நேரிடலாம். – கலாபம்

கடகம்:
இன்று, தயக்கம் விலகி, மனதில் தைரியம் வளரும். ஆர்வமுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். உபரி பணவரவில், சேமிப்பை அதிகரிப்பீர்கள். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி வளரும். – கலாபம்

சிம்மம்:
இன்று, சகோதரரின் எண்ணத்திற்கு மாறாக பேச வேண்டாம். தொழில், வளர்ச்சி பெற சில சீர்த்திருத்தம் செய்வது அவசியமாகும். அளவான பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். ஓய்வு நேரத்தில், இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். – கலாபம்

கன்னி:
இன்று, எதிர்பார்த்த வெற்றி செய்தி வந்து சேரும். நண்பர் ஆதரவு மனப்பாங்குடன் உதவுவர். தொழிலில் அபிவிருத்தி பணி, திருப்திகரமாக நிறைவேறும். லாப விகிதம் கூடும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, மங்கலத் தன்மையுடன் பேசுவீர்கள். புதிதாக அறிமுகம் ஆகிறவர் மனதில், உங்கள் மீதான நன்மதிப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, சிலரது பேச்சு பணிகளில், இடையூறு உருவாகலாம். சமயோசிதமாக விலகுவது நல்லது. தொழிலில் இலக்கை நிறைவேற்ற, கால அவகாசம் தேவைப்படும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வாகனத்தில், மிதவேகம் பயணமுறையை எளிதாக்கும். – கலாபம்

தனுசு:
இன்று, கவனக் குறைவால் மனதில் பதற்றம் ஏற்படலாம். சுற்றுசூழ்நிலை உணர்ந்து, நண்பரிடம் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்பது நலம். – கலாபம்

மகரம்:
இன்று, இளமைக்கால இனிய நிகழ்வுகளை எண்ணி மகிழ்வீர்கள். வாழ்வியல் நடைமுறை சீராக இருக்கும். தொழிலில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்கள், ஆடை, அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு. – கலாபம்

கும்பம்:
இன்று, சவால்களை ஏற்று செயல்பட எண்ணம் வளரும். ஓய்வை தவிர்த்து, பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

மீனம்:
இன்று, உங்களின் நற்செயலை, பொறாமை குணம் உள்ளவர் பரிகாசம் பேசுவர். தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு, திறமையை பயன்படுத்த வேண்டும். சராசரி பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருள், கவனமுடன் பாதுகாக்கவும். – கலாபம்

Related Posts:

«