இன்றைய பலன்கள் 07-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, கடினமான செயலில் ஈடுபடக் கூடாது. புதியவரை நண்பராக ஏற்பதில், தகுந்த பரிசீலனை வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சீராக, கூடுதல் உழைப்பு உதவும். குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். மாணவர்கள், விளையாட்டில் சாகசம் செய்ய வேண்டும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, இனிய அணுகுமுறையால், கூடுதல் நன்மை பெறுவீர்கள். உறவினர் சொந்தங்களை அறிமுகம் செய்வர். தொழில் வளர்ச்சியில், அபரிமிதமான முன்னேற்றம் உண்டு. ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

மிதுனம்:
இன்று, பகைமை குணம் உள்ளவர் நெருக்குதல் உருவாக்குவர். குடும்ப சிரமம் ஓரளவு சரிசெய்வீர்கள். தொழில் நேரம் தவறாமை பின்பற்ற வேண்டும். பணச்செலவில் சிக்கனம் நல்லது. காலக்கெடு தவறிய உணவுப் பொருள், கவனக்குறைவால் வாங்க நேரிடலாம். – கலாபம்

கடகம்:
இன்று, உயர்வான சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். நண்பர், உறவினரிடம் கூடுதல் நன்மதிப்பு உருவாகும். தொழில் வளர்ச்சி இலக்கு நிறைவேறி, மன மகிழ்வைத் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொறுப்பான பதவிபெற அனுகூலம் வளரும். – கலாபம்

சிம்மம்:
இன்று, புதிதாக பழகுபவரிடம் நிதானித்து பேசுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை இலக்கு நிறைவேற தாமதமாகலாம். சுய கவுரவம் பாதுகாக்க, பணச்செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். தியானம், தெய்வவழிபாடு மனதில் சாந்தகுணம் உருவாக்கும். – கலாபம்

கன்னி:
இன்று, உங்கள் நலன் விரும்புவரை சந்திப்பீர்கள். புதிய ஆலோசனை, உதவி கிடைக்கும், தொழிலில் அதிக நேர்மையுடன் பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். தாயின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, எதிர்வரும் சூழ்நிலையை சாதகமாக உருவாக்குவீர்கள். பொது நலப் பணியிலும் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர, அனுகூல காரணி பலம் பெறும். உபரி பணவரவில் நிலுவைப் பணக் கடன் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, நண்பருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவதில் சிரமம் வரலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவுக்கு மீறிய அளவில், புதிய செலவினங்கள் உருவாகும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் மதித்து செயல்படவும். – கலாபம்

தனுசு:
இன்று, தன்னை மற்றவர் புகழ வேண்டும் என்கிற எண்ணம் கொள்வீர்கள். பணிகளில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்பதால், உடல்நலம் ஆரோக்கியம் பெறும். – கலாபம்

மகரம்:
இன்று, மனசாட்சிக்கு அதிக மதிப்பு, மரியாதை தருவீர்கள். நண்பரின் இனிய பேச்சு, கஷ்டப்பட்ட மனதிற்கு ஆறுதல் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

கும்பம்:
இன்று, மனதில் தன்மான உணர்வு அதிகரிக்கும். உழைப்பில் உயர்வு பெற தேவையான பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய முன்னேற்றம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சில் சுமுக தீர்வு கிடைக்கும். – கலாபம்

மீனம்:
இன்று, ஆரவாரம் தவிர்த்து செயல்பட வேண்டும். குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற தாமதமாகலாம். தொழில் வியாபார நடைமுறையில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரி செய்யவும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது. – கலாபம்

Related Posts:

«