இன்றைய பலன்கள் 07-09-2012 by கலாபம்

மேஷம்:
இன்று, உங்கள் முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க கூடாது. கண்ணும், கருத்துமாக செயல்படுவதால், எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராகும். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். உறவினர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும்.
– கலாபம்

ரிஷபம்:
இன்று, எவரிடமும் உயர்வு, தாழ்வு இல்லாமல் பழகுவீர்கள். புதியவர்களின் அன்பு மனதை நெகிழ வைக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பணவருமானம் உண்டு. விரும்பிய பொருள் வாங்குவீர்கள். தெய்வ வழிபாடு இனிதாக நிறைவேறும்.
– கலாபம்

மிதுனம்:
இன்று, சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். உங்களின் பெருந்தன்மை குணம், நன்மை பெற உதவும். கடந்த கால அனுபவம் தொழில் வளர்ச்சிக்கு பயன்படும். தவிர்க்க இயலாத கூடுதல் பணச் செலவு வரலாம். வெளியூர் பயணம், பயன் அறிந்து மேற்கொள்ளவும். சொத்து ஆவணம் கவனமுடன் பாதுகாக்கவும்.
– கலாபம்

கடகம்:
இன்று எந்த செயலையும் எளிதாக செய்வீர்கள். சூழ்நிலை சாதகமாக இருக்கும். தொழில் சிறந்து அதிக பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கியதேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர், உறவினர் கூடுதல் பாசம் கொள்வர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
– கலாபம்

சிம்மம்:
இன்று, உண்மை, நேர்மை பின்பற்றுபவர்களுக்கு கூடுதல் மரியாதை தருவீர்கள். தொழிலில் இருந்த போட்டி, பொறாமை குறையும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். சமூக நடப்பில் புதிய அனுபவம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வளரும்.
– கலாபம்

கன்னி:
இன்று, உங்கள் தன்மானத்திற்கு சிறு சோதனை வரலாம். பொறுமை குணம் பின்பற்றுவதால், எதிர்கால நலன் சிறக்கும். ஆர்வமிக்க செயல்மட்டுமே தொழில் வளர உதவும். பணத்தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவுவகை உண்ணக் கூடாது. எதிர்ப்பார்த்த செய்தி வர தாமதமாகும்.
– கலாபம்

துலாம்:
இன்று, நீங்கள் எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி கொடுக்கக் கூடாது. உடல் நலக்குறைவு செயலில் தடுமாற்றம் தரலாம். அனுபவ சாலியின் ஆலோசனை தொழில் வளர உதவும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். பகை அறிந்து விலகுதல் நன்மை தரும்.
– கலாபம்

விருச்சிகம்:
இன்று, முன் யோசனையுடன் செயல்படுவீர்கள். நடைமுறையில் இருந்த சிரமம் விலகும். தொழிலில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு மூலதன தேவைக்கு உதவும். வீட்டிற்கு உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.
– கலாபம்

தனுசு:
இன்று, மனதில் புதிய ஞானம் பிறக்கும். சவால்களை வென்று சாதனை புரிவீர்கள். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கூடுதல் பணவரவில், நிலுவைக் கடன் அடைப்பீர்கள். சிறந்த மனிதரை நண்பராக பெறுவீர்கள். முக்கிய தேவைக்கு பணம் சேமிப்பீர்கள்.
– கலாபம்

மகரம்:
இன்று, மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படலாம். அக்கம்பக்கத்தவரிடம் அதிக பேச்சு கூடாது. கூடுதல் உழைப்பால், தொழில்நிலை சீராகும். எதிர்ப்பாராத பணச்செலவு ஏற்படலாம். அவசியமற்ற பணக்கடன் பெறக்கூடாது. உறவினர் எதிர்ப்பார்ப்புடன் செயல்படுவர்.
– கலாபம்

கும்பம்:
இன்று, உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. தகுந்த ஓய்வு உடல் நலம் சீராக்கும்.
– கலாபம்

மீனம்:
இன்று, ஒருமுக மனதுடன் செயல்படுவீர்கள். தாமதமான காரியம் இலகுவாக நிறைவேறும். தொழில் வளர்ச்சியால், மன மகிழ்ச்சி கூடும். தாராள பணவரவு உண்டு. பொன், பொருள் வாங்க யோகபலன் உண்டு. உறவினரின் அன்பு மகிழ்ச்சி தரும்.
– கலாபம்

Related Posts:

«