இன்றைய பலன்கள் 08-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, எவரிடமும் அளவுடன் பேசுவது நற்பெயரை பாதுகாக்க உதவும். தொழிலில், சிறு அளவிலான இடையூறு உருவாகலாம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில், கவன நடை பின்பற்றவும். மாணவர்கள், கூடுதல் முயற்சியினால் சராசரி தேர்ச்சி விகிதம் பெறலாம். – கலாபம்

ரிஷபம்:
இன்று பணிகளில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தன்மை பாதுகாப்பது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு நல்லது. புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். – கலாபம்

மிதுனம்:
இன்று, இனிய நினைவுகளில் மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும். தாராள பணவரவு உண்டு. குடும்பத்தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத சுபசெய்தி வந்து சேரும். – கலாபம்

கடகம்:
இன்று, அடுத்தவரை நம்பி முக்கிய செயலை ஒப்படைக்க வேண்டாம். தொழிலில், அதிக நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். உடல் நலத்திற்கு, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை அவசியமாகும். – கலாபம்

சிம்மம்:
இன்று, திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் நற்பெயர் பெற அனுகூல நிலை உருவாகும். தொழில், வளர்ச்சிப்பணி திருப்திகரமாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, உங்களிடம் முன்னர் உதவி பெற்றவர் நன்றி மறந்து பேசுவார். முக்கியமான பணியில், கூடுதல் கவனம் வேண்டும். தொழிலில், மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் சாந்த குணம் வளர உதவும். – கலாபம்

துலாம்:
இன்று, சூழ்நிலைகள் அனுகூலமாக உருவாகும். வாழ்வில் எதிர்பார்த்த நன்மையை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்கள் பேச்சில் தத்துவமும், ஆன்மிக கருத்தும் நிறைந்திருக்கும். உதவிட யோசித்த உறவினர் மனமுவந்து உதவுவர். தொழில், வியாபார நடைமுறை சீராகும். லாபவிகிதம் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். – கலாபம்

தனுசு:
இன்று, அறிமுகம் இல்லாதவருடன் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும். அதிக விலையுள்ள பொருட்களை, கவனமுடன் பாதுகாக்கவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, எதிர்கால நலன் பற்றிய அக்கறை கொள்வீர்கள். பணிகளை கூடுதல் அளவில் ஏற்பதால் சிரமம் வரலாம். தொழில்,வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்த வேண்டாம். – கலாபம்

கும்பம்:
இன்று, பிறர் வியப்புறும் வகையில் பணிபுரிவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி, திருப்திகரமாக முன்னேற்றம் பெறும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். – கலாபம்

மீனம்:
இன்று, உங்கள் எண்ணமும், செயலும் உற்சாகம் பெறும். நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வாழ்க்கைத் தரம் மேம்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு உருவாகும். – கலாபம்

Related Posts:

«