இன்றைய பலன்கள் 09-01-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உங்களைச்சுற்றி நடக்கிற சூழ்நிலைகளின் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த நன்மை கிடைக்க, கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். கூடுதல் உழைப்பால் பணவரவு சீராகும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
– கலாபம்

ரிஷபம்:
இன்று, உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் முழு அளவிலான வெற்றி கிடைக்கும். பலரும் வியக்கும் வகையில் தொழில், வியாபார வளர்ச்சியில் முன்னேற்றம் உண்டு. தாராள பணவரவில், கொஞ்சம் சேமிப்பீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதை நெகிழ வைக்கும்.
– கலாபம்

மிதுனம்:
இன்று, உங்கள் உழைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஓய்வை தவிர்த்து, அதிக அளவில் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதில் பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் தரும். நண்பரின் அறிமுகத்தால், சலுகை விலையில் விரும்பியபொருள் வாங்குவீர்கள்.
– கலாபம்

கடகம்:
இன்று, உங்கள் செயல்களில் முன்யோசனை குணம் பின்பற்றுவது அவசியம். அக்கம்பக்கத்தவரிடம், சச்சரவு வராமல் நடந்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். அத்தியாவசிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் செலவு செய்வீர்கள்.
– கலாபம்

சிம்மம்:
இன்று, தவிர்க்க முடியாத வகையில் அவசரப்பணி ஒன்று ஏற்படலாம். நண்பரின் உதவியால் தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தன்மையை பாதுகாத்துக் கொள்வீர்கள். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். நண்பருடன், வாகன பயணத்தில் மிதவேகம் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வாத அழகு சாதனப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.
– கலாபம்

கன்னி:
இன்று, இனிய எண்ணங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நியாய, தர்ம குணங்களை அதிகம் பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சார்ந்த சிரமம் விலகும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சிகர எண்ணங்களை பகிர்ந்து கொள்வர். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
– கலாபம்

துலாம்:
இன்று, உங்கள் செயல்களில் ஆரவாரம் தவிர்த்து, நடந்து கொள்ள வேண்டும். நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணி ஒன்றை, பிறரிடம் ஒப்படைக்க கூடாது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு உற்சாகம் தரும்.
– கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்கள் மனதில் இறைவன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்களை உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். விருந்து விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.
– கலாபம்

தனுசு:
இன்று, உங்களின் எதிர்கால நலன் பற்றிய அக்கறை கொள்வீர்கள். நண்பரின் ஆலோசனை, மனதில் புதிய நம்பிக்கையைத் தரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். உழைப்புக்கு ஏற்றபடி பணவரவு இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.
– கலாபம்

மகரம்:
இன்று, உங்கள் செயல்களில் நியாய, தர்ம குணம் அதிகம் நிறைந்திருக்கும். உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி நன்மை பெறுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். அரசியல்வாதிகள், பதவி பொறுப்பு பெற அனுகூலம் உண்டு.
– கலாபம்

கும்பம்:
இன்று, உங்களுக்கு எதிராக உருவான செயல் பலமிழந்து போகும். மனதில் பலநாள் இருந்த குழப்பம் விலகும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை தகுந்த முன்னேற்றம் பெறும். நிலுவை பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
– கலாபம்

மீனம்:
இன்று, நீங்கள் நிறைவேற்ற திட்டமிட்ட செயலை மறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். சகதொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் சச்சரவு கூடாது. உற்பத்தி, விற்பனை இலக்கு ஓரளவு நிறைவேறும். பணவரவை சிக்கன செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. போக்குவரத்தில் கவனநடை பின்பற்றுவது அவசியம்.
– கலாபம்

Related Posts:

«