இன்றைய பலன்கள் 09-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, மனம், செயலில் அதிக உறுதி வேண்டும். பணிகள் சிறக்க அனுபவசாலியின் ஆலோசனை பெறுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய தேவைக்கு பணம் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, தன்மானத்துக்கு சோதனை வரலாம். எவரிடமும் தர்க்கவாதம் பேசவேண்டாம். தொழிலில் அளவான மூலதனம், அதிக உழைப்பு நற்பலன் பெற உதவும். அரசு தொடர்பான உதவி கிடைக்க தாமதமாகலாம். பெண்கள், தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. – கலாபம்

மிதுனம்:
இன்று, மனதில் அன்பு எண்ணம் அதிகரிக்கும். இனிய அணுகுமுறையால் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

கடகம்:
இன்று, உங்களின் எதார்த்த பேச்சு நண்பர் மனதில் வருத்தம் உருவாக்கலாம். பணிகளில் நிதானம், பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும். தொழிலில் மாறுபட்ட தன்மை இருக்கும். புதிய இனங்களில் பணச் செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும். – கலாபம்

சிம்மம்:
இன்று, உங்களின் திறமையை, பலரும் அறிய அனுகூல வாய்ப்பு உருவாகும். தவறாமல் பயன்படுத்துவீர்கள். தொழில் வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். அதிர்ஷ்டகரக பணவரவு கூடும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். – கலாபம்

கன்னி:
இன்று, பொறாமை குணம் கொண்ட ஒருவர், இடையூறு செய்ய முற்படுவார். பொறுமை காப்பது நன்மை பெற உதவும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். கடனுக்கு கிடைக்கிறதென்று, அதிக பயன் தாராத பொருள் வாங்க வேண்டாம். இயந்திர தொழிற்சாலை பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். – கலாபம்

துலாம்:
இன்று, அக்கம்பக்கத்தவருடன் கூடுதல் அன்பு பாராட்டுவீர்கள். உங்கள் மீதான நல்ல எண்ணம் வளரும். தொழில், வியாபாரம் செழிக்க, தேவையான அரசு உதவி பெறலாம். தாராள பணவரவு கிடைக்கும். வாசனைப் பொருட்களை விரும்பி பயன்படுத்துவீர்கள். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, நண்பருடன் புதிய செயல்திட்டம் பற்றி பேசுவீர்கள். தொழில் நுட்ப ஆலோசனை கிடைத்து மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி பணவரவில் குடும்ப தேவையை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணிபுரிந்து, பாராட்டு, வெகுமதி பெறுவர். – கலாபம்

தனுசு:
இன்று, சுயதேவை நிறைவேற்ற அதிக பணம் தேவைப்படும். போட்டி, பந்தயத்தில் எவருடனும் ஈடபடக் கூடாது. தொழில், வியாபார இலக்கு பூர்த்தி செய்வதில், தாமதம் ஏற்படும். சேமிப்பு பணம் அத்யாவசிய செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். – கலாபம்

மகரம்:
இன்று, உங்களிடம் முன்னர் உதவி பெற்றவர் உதாசினமாக பேசுவார். பொறுமை குணம் பின்பற்றுவது அவசியம். கூடுதல் உழைப்பால், தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவு சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். – கலாபம்

கும்பம்:
இன்று, கருணை குணத்துடன், சிலருக்கு உதவி புரிவீர்கள். நல்லவர்களின் பாராட்டு மனதிற்கு ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப் பணி நிறைவேறும். ஆதாய பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

மீனம்:
இன்று, பணியில் கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்கள். இடையூறு எளிதில் விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் அதிகாரிகள் பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டுக்கு வருகிற உறவினர்களை நன்கு உபசரிப்பீர்கள். – கலாபம்

Related Posts:

«