இன்றைய பலன்கள் 10-08-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, முக்கியமான பணி ஒன்றை, மதிநுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். அன்புக்கு உரியவர் பாராட்டுவர். தொழில் வளர்ச்சி பெற, புதிய சூழ்நிலை உருவாகும். நிலுவைப் பணம் எளிதில் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி, புதிய பதவி பெற அனுகூலம் உருவாகும். – கலாபம்

ரிஷபம்:
இன்று, அக்கம்,பக்கத்தவரிடம் அதிக அளவில் உதவி கேட்க வேண்டாம். நடைமுறை செயலில், சிறுமாற்றம் தேவைப்படும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். நண்பர் வாங்குகிற பொருளுக்கு, நீங்கள் பேரம் பேச வேண்டாம். – கலாபம்

மிதுனம்:
இன்று, மாறுபட்ட சூழ்நிலை காரணமாக, நண்பர் மீதான நம்பிக்கை குறையும். அத்தியாவசியப் பணி நிறைவேற தாமதமாகும். தொழிலில் பெற்ற அனுகூலத் தன்மை பாதுகாப்பது நல்லது. சேமிப்பு பணம், செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும். – கலாபம்

கடகம்:
இன்று, உண்மை, நேர்மை குணம் அதிகம் பின்பற்றுவீர்கள். மனதில் நிம்மதி,பெருமிதம் ஏற்படும். தொழில் வளர, முக்கியஸ்தரின் உதவி எளிதாக கிடைக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். – கலாபம்

சிம்மம்:
இன்று, நற்செயல் புரிந்தும், மனம் வருந்துகின்ற மாறுபட்ட நிலை ஏற்படலாம். பகைமை குணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு உரிய பலன்பெற உதவும். பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். – கலாபம்

கன்னி:
இன்று, மனதில் புதிய சிந்தனை உருவாகும். பணித்திறன் வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாகும். இயலாதவர்களுக்கு, கருணை மனதுடன் உதவுவீர்கள். – கலாபம்

துலாம்:
இன்று, நண்பரின் கவனக்குறைவான செயலை, குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, சாதகமான சூழ்நிலை அறிவது நல்லது. சேமிப்பு பணம், அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். காலமுறை உணவுப் பழக்கம், உடல்நலம் பாதுகாக்கும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்கள் நண்பரிடம், முன்னர் கேட்ட உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல்களால், கூடுதல் வெற்றி பெறுவீர்கள். தொழில் சிறந்து, வாழ்க்கைத் தரம் உயரும். தாராள பணவரவு கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். – கலாபம்

தனுசு:
இன்று, உங்களின் சிறிய முயற்சியும், அதிக நன்மையை பெற்றுத் தரும். உறவினரிடம் கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் உற்பத்தி, விற்பனையை அதிகரிப்பீர்கள். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, பணிகளில் அதிக முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும். உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழிலில் வருகிற இடையூறு தாமதமின்றி சரி செய்வது அவசியம். பணச்செலவு அதிகரிக்கும். பெண்கள், தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. – கலாபம்

கும்பம்:
இன்று, மற்றவரை விமர்சிக்க சிலர் உங்களை பயன்படுத்துவர். சிறு பணியும் அதிக சுமை போல தோன்றும். அனுபவ அறிவின் பயனால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றவும். – கலாபம்

மீனம்:
இன்று, மனம் செயலில், புதிய பரிமளிப்பு உருவாகும். பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் வியத்தகு வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். தொழில்நுட்ப உபகரணம் வாங்குவீர்கள். – கலாபம்

Related Posts:

«