இன்றைய பலன்கள் 14-05-2013 by கலாபம்

மேஷம்:
இன்று, உண்மைக்கு தகுந்த மரியாதை தருவீர்கள். வெகுநாள் எதிர்பார்ப்பு இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். – கலாபம்

ரிஷபம்:
இன்று, சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மறந்து போகும். தொழில் இலக்கு நிறைவேற, கால அவகாசம் தேவைப்படும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. – கலாபம்

மிதுனம்:
இன்று, உங்களின் கடந்த கால உழைப்புக்கு உரிய பலன் தேடி வரும். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். – கலாபம்

கடகம்:
இன்று, நம்பகத்தன்மை இல்லாதவரிடம், குடும்ப விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். பணவரவுக்கேற்ப புதிய இனங்களில் செலவு ஏற்படும். போக்குவரத்தில் கவனநடை நல்லது. சீரான ஓய்வு உடல் நலம் காக்கும். – கலாபம்

சிம்மம்:
இன்று, எதிர்கால திட்டம் குறித்து சிந்திப்பீர்கள். நண்பரின் ஆலோசனை கிடைத்து நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்சசி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். – கலாபம்

கன்னி:
இன்று, இயற்கையின் அதிசயங்களை வியந்து ரசிப்பீர்கள். செயல்களில் நேர்த்தி உருவாகும். தொழில், வியாபாரத்தில் இடையூறு வராத நன்னிலை ஏற்படும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் பணவசதிக்கேற்ப ஆடை, ஆபரணம் வாங்குவர். – கலாபம்

துலாம்:
இன்று, உங்களின் செயல்திறன் கண்டு, சிலர் பொறாமைப்படுவர். தொழில், வியாபாரத்தில் உள்ள இடையூறு சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகும். – கலாபம்

விருச்சிகம்:
இன்று, உங்கள் உறவினர் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக கூடுதல் முயற்சி, உழைப்பு அவசியம். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றவும். – கலாபம்

தனுசு:
இன்று, உங்களின் செயலில், சமூக அக்கறை மிகுந்திருக்கும். எவரிடமும், தகுந்த அன்பு பாராட்டுவீர்கள். தொழிலில் வளர்ச்சிப்பணி திட்டமிட்டபடி நிறைவேறும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். – கலாபம்

மகரம்:
இன்று, உங்கள் அறிவுத் திறமையை நண்பர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பணவரவு கிடைப்பதில் இருந்த இடையூறு விலகும். உடல்நல ஆரோக்கியம் சீராகும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். – கலாபம்

கும்பம்:
இன்று, உங்களுக்கு இடையூறாக செயல்படுபவரை, அறிகிற வாய்ப்பு வரும். சிறிய பணிகளுக்கும் அதிக முயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக, புதிய யுக்தி பின்பற்றுவது நல்லது. பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். – கலாபம்

மீனம்:
இன்று, உங்கள் மனம் குழப்பத்துடன் இருக்கும். எவரிடமும் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். கடனுக்கு கிடைக்கிறதென்று, அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம். – கலாபம்

Related Posts:

«